3 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், இந்த முறை 6 மாதங்கள் தாமதமாக இன்று (23.06.2019) நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
“எனக்குத் தெரிந்து இரண்டு அணியினரும் நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுறாங்க, இரண்டு பேரும் நடிகர் சங்க கட்டிடத்தை உடனே கட்டவேண்டும் என நினைக்குறாங்க. எனக்கு கட்சி பாகுபாடு எதுவும் இல்லை, யார் வெற்றிப்பெற்றாலும் எனக்கு சந்தோஷம்தான். ஆனால், இன்று படப்பிடிப்பிற்காக மும்பை செல்வதற்கு எனக்கும் என் அசோஷியேட் டிரேக்டருக்கும் ஃப்லைட் டிக்கெட் எடுத்திருந்தோம், திடிரென தேர்தல் வைத்ததால், அந்த டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டு வந்தோம், அதனால், எனக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆனது. என்னைப் போல எல்லோரும் இப்படி வரமுடியுமா? ஏன் இந்த குழப்பம் என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.
நான் இப்போது விழுந்தடித்து ஓடி வருகிறேன், எல்லோரும் இப்படி வருவார்களா என்று தெரியாது. நமக்கு இதில் என்ன முக்கியத்துவம் என்று நினைப்பார்கள். எதற்கு இந்த போட்டிகள், தேர்தல் முடிந்ததும் எல்லோரும் கூடித்தான் வேலை செய்வோம். ஒரு அமைப்பாக இருக்கிற நாம் நமக்குள் பேசி முடித்திருக்கலாம், இந்த தேர்தலே எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது”. என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.