Skip to main content

'மீண்டும் வேண்டும் ராமநாதபுரம்' - ஐ.யூ.எம்.எல். கோரிக்கை

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
'We want Ramanathapuram back' - IUML demand

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்திருக்கும் நிலையில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது. 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட நிலையில், ஏற்கனவே போட்டியிட்ட ராமநாதபுரம் மற்றும் அதனுடன் கூடுதலாக மத்திய சென்னை ஆகிய தொகுதிகளைக் கேட்க உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், பொதுச் செயலாளர் அபுபக்கர், ஷாஜகான், அப்துல் பாசித் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சார்ந்த செய்திகள்