13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்:
ஸ்டாலின் அறிவிப்பு
நீட் தேர்விற்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, அனிதாவின் கல்வியை அரசு மறுத்ததால் அவரை தொலைத்து நிற்கிறோம். அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய,மாநில அரசுகள்தான் பொறுப்பு. நீட் தேர்விற்கு எதிராக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்கு தடை விதித்திருக்கிறார்கள். தமிழக காவல்துறைதான் கண்டன பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க திட்டமிட்டது. பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. காவல்துறையின் சதித்திட்டத்தை முறியடித்து விட்டுதான் பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.
மாணவர்களின் போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவு உண்டு’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதிலும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.