Skip to main content

சத்துணவு உதவியாளர் நியமனத்தில் முறைகேடு; மண்ணெண்னை கேனுடன் விதவை பெண் போராட்டம்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
lady

 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமேனி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதனை தொடர்ந்து இவரது மனைவி வேம்பரசி(37) மகன் சத்தியபிரியன்(3) அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் உள்ள சத்துணவு உதவியாளர் பணிக்கு விதவை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரின உத்திரவின் பேரில் இவரை நேர்முக தேர்வில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

 தேர்வில் வெற்றிபெற்று பணிக்காக காத்திருந்தபோது இறுதி பட்டியலில் இவரது பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவனகிரி வட்டாரவளர்ச்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார். சரியான பதில் இல்லாததால் வேதனையடைந்து அவரது மகனுடன் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மண்ணெண்னை கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையறிந்த புவனகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.

 

இது குறித்து வேம்பரசி கூறுகையில், நான் நேர்முக தேர்வுக்கு சென்று வந்ததிலிருந்து அதிமுக  ஒன்றிய செயலாளர், இந்த வேலைக்கு ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும என்றார். என்னால் அவ்வளவு பணம் கொடுக்கமுடியாது என்று கூறியுடன் ஒரு லட்சமாவது கொடுக்க வேண்டும் என்றார். என்னால் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் ஆத்திரமடைந்தவர், நீ எப்படி வேலை வாங்கிடுவ என்று பார்கிறேன் என கூறி எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை மற்றவர்களுக்கு மாற்றிவிட்டார். நான் விதவை உதவிதொகை பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். எங்களுக்கென்று யாரும் இல்லை.  இந்தவேலை கிடைக்கவில்லையென்றால் நானும் எனது மகனும் இதே இடத்தில் மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.  

 

சத்துணவு பொறுப்பாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களின் பணி நியமனத்தில் இதற்கு முன் இருந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அதிமுகவை சேர்ந்தவர்கள் கொடுக்கும் பட்டியலை நிராகரித்ததால் 6 மாதத்திலே அவரை பணிமாற்றம் செய்துவிட்டனர் அதிமுகவினர் என்பது குறிப்பிடதக்கது. 

சார்ந்த செய்திகள்