Skip to main content

மத்திய அரசின் பாராமுகம்..! ஈரோட்டில் ஒவ்வொரு நாளும் 100 கோடி இழப்பு!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018


பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஐந்தாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு ஜவுளி மார்கெட்டில் கோடிக்கணக்கில் உற்பத்தியான ஜவுளிரகங்கள் தேங்கியுள்ளது. நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி துணிகள் வட மாநிலங்களுக்கு ஈரோட்டிலிருந்து ஏற்றுமதியாவது வழக்கம்.

 

 

ஆனால் லாரி ஸ்டிரைக்கால் இதுவரை சுமார் 500 கோடி ரூபாய் ஜவுளி துணிகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படாமல் அப்படியே தேங்கி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை நிறுத்தி வைக்க முடிவு செய்து நாளை 25ந் தேதி முதல் லாரி ஸ்டிரைக் முடியும் வரை விசைத்தறிகளை இயக்குவதில்லை என முடிவு செய்து அறிவித்துள்ளனர். இதனால் இத்தொழிலில் ஈடுபடும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு இந்த ஸ்டிரைக்கை மத்திய அரசு பாராமுகமாக கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதனால் ஜவுளி, விசைத்தறி தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடுவதோடு நாள் ஒன்றுக்கு ஈரோட்டில் மட்டும் 100 கோடி ஜவுளி வர்த்தகம் அடியோடு முடங்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்