Skip to main content

“95 சதவீதமா... இருந்த பெயர் பலகையை கூட காணவில்லை” - எம்.பி சு.வெங்கடேசன்

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

"95 percent... even the name board is missing" - MP Su Venkatesan

 

“எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% பணிகள் முடிந்து விட்டதாக ஆளும் கட்சியினர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது. இங்கு வந்து பார்த்தால் ஏற்கனவே இருந்த பெயர் பலகை கூட காணவில்லை” என எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

 

மதுரையின் பாஜகவின் பல்துறை வல்லுனர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெபி நட்டா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலத்தை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் எம்.பி மாணிக்கம்தாகூர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவேறிவிட்டதாகவும் விரைவில் பிரதமர் அதை நாட்டிற்கு அர்பணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. போன வாரம் கூட மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரிகள் இன்னும் ஆரம்ப வேலையே நடக்காமல் இருப்பதாக தெரிவித்தனர். போன வாரம் கூட எம்.பி. மாணிக்க தாகூர் பார்த்த போது ஒரு வேலையும் நடக்கவில்லை. 

 

ஆனால் இடைப்பட்ட இந்த நான்கு நாளில் 95% பணிகள் முடிந்து விட்டதாக ஆளும் கட்சியினர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வேளை இரவோடு இரவாக புல் புல் பறவைகளின் மூலம் கட்டி முடித்துவிட்டனரோ என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால் இப்பொழுது அவர்கள் செய்யும் வேளைகள் எல்லாம் புல் புல் பறவைகளின் மூலமாகத்தான் செய்து முடிக்கிறார்கள். எனவே தான் நானும் மாணிக்கம் தாகூரும் நேரடியாக பார்வையிடலாம் என வந்தோம். இங்கு வந்து பார்த்தால் ஏற்கனவே இருந்த பெயர் பலகை கூட காணவில்லை” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்