![9 college students arrested for birthday celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/fPwu4w-j5CUhnOvBE_UGrk8L1OkZMjGrFFVSQ3p2rTM/1533987010/sites/default/files/inline-images/maxresdefault_56.jpg)
சென்னை அம்பத்தூரில் பேருந்தை வழிமறித்து நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 9 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூரில் கடந்த வியாழக்கிழமை அன்று கல்லூரி மாணவர்கள் சிலர் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து சக மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டித்ததால் அவர்களை அந்த மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில், 7 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடிய 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.