Skip to main content

கருணைகொலை செய்ய வேண்டி திருநங்கை ஷானவி பொன்னுசாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் 

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
letter


கருணைகொலை செய்ய வேண்டி திருநங்கை ஷானவி பொன்னுசாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூரை சேர்ந்தவர் ஷானவி.  இவர் சென்னை வேளச்சேரியில் தங்கி  தனது பொறியல் படிப்பை 2010ல் முடித்தார்.  இந்த நிலையில் அதன்பிறகு ஏர் இந்தியாவில்  வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக  பணிபுரிந்து வந்துள்ளார். இதுவரையிலும் தன்னை திருநங்கை என்று தன் மனதிற்குள் வைத்திருந்த அந்த என்னத்தை வெளிக்காட்டாமல் இருந்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார் ஷானவி.

 

இந்த நிலையில் தான்  தாய்யும் தந்தையும்  ஷானவியை வெறுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்கள். அதன்பிறகு தனக்கான வாழ்க்கை வாழ உணவுக்கும் உடைக்கும் தங்கும் வசதிக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த நிலையில் தான் ஏர் இந்தியன் நிறுவனம்  நேர்முக தேர்வுக்கு அழைத்தனர் .இந்த நேர்முக தேர்வில் நான் பங்கேற்றேன் ஆனால் இறுதி பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை ,இப்படியே நான்கு முறை என்னை தேர்வு செய்யவே இல்லை என்ன காரணம் என்று கேட்ட போது இங்கு ஆண் பெண் மட்டும்தான் பணிக்கு ஆட்களை நியமிக்கின்றோம். மற்றவர்களை இல்லை என்று மனித மாண்புக்கு எதிரான ஒன்றை கருத்தாக பதில்கொடுத்திறுக்கிறது அந்த நிறுவனம்.

 

 தனக்கு அனைத்து தகுதியும் இருந்தும் தன்னை மூன்றாம் பாலினம் என்ற ஒரே காரணத்திற்காக  மறுப்பது இந்த ஜனநாயகத்தின் நியதியாகாது என்று உச்சநீதிமன்றத்தை நாடிய ஷானவிக்கு இதன் தொடர்பாக பதிலளிக்கவேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துறைக்கு  17.11.17 அன்று உத்தரவிட்டது. ஆனால் அதற்கான எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை ! 

 


இந்த நிலையில் மனம் நொந்து போன ,ஷானவி பொன்னுசாமி என்னை கருனைக் கொளை செய்து விடுங்கள் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
இதன் தொடர்பாக பேசிய ஷானவி பொன்னுசாமி,  நானும் இந்த நாட்டில் பிறந்தவள்தானே ! எனக்கு இந்த நாட்டின் வாழ்வதற்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை , என்னை இந்த நாட்டில் ஒரு மனிதனாகவே ஏற்கவில்லை என்ற போது நான் இருந்த என்ன பயன் அதற்கு பதிலாக இந்த நாடே என்னை கருணைக்கொளை செய்துவிடட்டும். 

 


எனக்கு அத்துனை தகுதியும் இருந்தும் வேலைத்தர மறுக்கிறது நான் ஒவ்வொருமுறையும் இந்த ஏர் இந்தியா நேர்முக தேர்வுக்காக மும்பைக்கு போகும் பணம் கூட இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் இந்த பிரச்சனையிலும் நான் நேர்முக தேர்வில் சென்று வந்தேன். ஆனால் என்னை தேர்வு செய்யவில்லை.  இப்போ மும்பையில் தான் இருந்து வருகிறேன் . இந்த நிலையில் இந்த மண்ணில் நான் வாழ்வதை விட இந்த அரசு கையால் சாவது மேல் என்று நினைத்துதான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். என்னைப் போல இந்த சமூகம் அழியுமானால் இது என்ன ஜனநாயகநாடு என்றார். 

 

உண்மையில் இந்த சமூகத்தை அன்று இருந்து இன்றுவரையிலும் இவர்களை புறம் தள்ளப்பட்டு வருகிறதே இது நியாயமா? அவர்களின் உயர்வுக்காக இந்த அரசு இடஒதுக்கிடு செய்ய ஏன் மறுக்கிறது. காலம்காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்த சமுகத்திற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா !

- அ.அருண்பாண்டியன்          
 

சார்ந்த செய்திகள்