கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையை சேர்ந்த சாதிக் அலி(49) என்பவர் ஏர் டிராவல்ஸ் மற்றும் மணி டிரான்ஸ்பர் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பேயம்பாளையத்தை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் பர்கத்அலி(27) என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'தான் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிவதாகவும், ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ள தனது மகன் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான டிக்கெட் வேண்டும்' என்றும் கேட்டு, அவரது ஆதார் கார்டு நம்பரை சாதிக் அலியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து மங்கலம்பேட்டை போலீசில் அவர் புகார் செய்ததனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பர்கத் அலியின் புகைப்படத்தை கண்டுபிடித்து பில்லூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பேருந்தில் வந்த பர்கத்அலியை மடக்கி பிடித்தனர்.
பின்னர் விசாரணையில் 'ஜஸ்ட் டயல் அப்' பில் டிராவல்ஸ் ஏஜென்சிகளின் நம்பர்களை தெரிந்துகொண்டு தமிழகம் முழுவதும் ஏர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 60 லட்சம் வரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் பர்கத்அலி மீது வழக்குப்பதிவு செய்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாரதியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த பர்கத்அலி வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தன்னை ஒரு ராணுவ வீரர் என அறிமுகம் செய்து தனது ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டது என்று கூறி அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போட சொல்லுகிறேன் என வங்கி கணக்கு என்னை கேட்டு வாங்கி அந்த எண்ணை ஏர் டிராவல்ஸ் ஏஜென்சிகளிடம் கொடுத்து பணத்தை பெற்றுள்ளார்.
இவரிடம் பாதிக்கப்பட்டோர் கடந்த ஆண்டு 'டாக்டர் பர்கத்அலியால் பாதிக்கப்பட்டோர் குழு' என்ற வாட்ஸ் அப் குழு ஒன்று துவக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.