திருவெறும்பூர் அருகே கிளியூரில் 50 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது! (படங்கள்)
பாலத்தின் வழியே சரக்கு லாரி வீடு கட்டுவதற்கு அரலை கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது பளு தாங்காமல் பாலம் திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.
பாலம் இடிந்து விழுந்ததால் கிளியூரிலிருந்து மாதாகோவில் வரையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாதாகோவில் பொதுமக்கள் வெளியே வருவதற்கும், பள்ளிக்கு குழந்தைகள் செல்வதற்கும் இருந்த ஓரு பாலம் இது தான். இது பாசவாய்கால் பாலம் என்பதால் தண்ணீர் திறந்து விடும் இந்த நேரம் பார்த்து இந்த பாலம் இடிந்து விழுந்ததை உடனே சரி செய்யவில்லை என்றால் விவசாய மக்களுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். உடனே சரி செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-ஜெ.டி.ஆர்