Skip to main content

லலிதா ஜுவல்லரியில் சுமார் 50 கோடி நகை கொள்ளை !

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

 

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை பரப்பி உள்ள லலிதா ஜூவல்லரியின் திருச்சி கிளையில் 50 கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தில் மூன்று அடுக்கு மாடியில் மிக பிரம்மாண்டமான ஷோ ரூம் ஒன்று உள்ளது.

இன்று திருச்சி கிளையில் உள்ள லலிதா ஜுவல்லரி கடையில் இன்று காலை ஒன்பது மணிக்கு முன் பக்க கதவை திறந்தபோது அதன் கீழ் தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே போலிசுக்கு தகவல் சொன்னார்கள். போலிஸ் வந்து நடத்திய விசாரணையில் உள்ளே சென்று பார்வையிட்டபோது பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு அதிலிருந்து கடைக்குச் சென்று கொள்ளையர்கள் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தெரியவந்துள்ளது .

இந்த ஷோரூமில் உள்ள கீழ்தளத்தில் உள்ள நகைகள் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டுயிருப்பதும். 3 தளங்கள் கொண்ட இந்த கடையில் மேல் தளத்திலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று விசாரணையை முடுக்கி உள்ளது காவல்துறை.

இந்த நகைக்கடைக்கு அடுத்து சுவாதி திருமண மண்டபம் ஹோட்டல் என நிறைய கடைகள் உள்ளது அந்த பகுதியில் உள்ள திருமணம மண்டபத்தில் அதிகாலையில் இருந்தே திருமணம் என்பதால் பகுதியில் கூட்டம் அதிகம் உள்ளதால் நள்ளிரவு நேரத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பீடு என்ன என்பதையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.

கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார். நகைகளின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறது போலிஸ் தரப்பு. கடையின் வாயில் ஷட்டரில் அலாரம் பொறுத்தப்பட்டுள்ளது. இதனைசுதாரித்து வாயில் வழியாக திருடாமல் சுவரை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. 

 

சார்ந்த செய்திகள்