
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரில் அண்ணாசாலையில் உள்ள வேலூர் சரக டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு அருகில் உள்ளது, அரசின் 'பெண்கள் பிற்காப்பு இல்லம்'. இங்கு சிறார் திருமணத்தை தடுத்து நிறுத்தி, அழைத்து வரப்படும் சிறுமிகள், பாலியல் தொழிலில் உள்ள பெண்கள், சிறையில் இருந்து விடுதலையாகி வேறு எங்கும் செல்ல முடியாத பெண்கள் எனப் பல்வேறு காரணங்களால் (காவல்துறை, நீதித்துறை கண்காணிப்பில்) பல பெண்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
டிசம்பர் 8ஆம் தேதி விடியற்காலை 2 மணிக்கு, இந்த இல்லத்தில் இருந்து, 5 இளம் பெண்கள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை இங்கு தங்கவைத்திருந்த பாலியல் தொழிலாளியான, பெண்மணி ஒருவர் தப்பிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பாகாயம் காவல் நிலையத்தில் நிலையப் பொறுப்பாளர், பெண்மணி தந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடிவருகின்றனர். இது தொடர்பாக, பாகாயம் காவல்துறை சார்பில், தப்பிச் சென்றவர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களைக் காண்பவர்கள் உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடும்படலம் தீவிரமடைந்துள்ளது.