Skip to main content

சி.ஆர்.பி.எப் வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சந்திரகலா என்கிற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகள் ஸ்ரீநாதன்யா.

 

Final homage to CRPF player with 21 bombs!


செந்தில்குமார் சென்னை சி.ஆர்.பி.எப் 77ஆவது படைபிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்ததார். அவரை அதிகாரிகள் அந்தமானுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். அங்கு கடல் அலையில் சிக்கி உயிரிழந்த செந்தில் குமாரின் உடல் துணை இராணுவ படை வாகனத்தில் சொந்து ஊரான வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Final homage to CRPF player with 21 bombs!

 

Final homage to CRPF player with 21 bombs!

 

உறவினர்கள் மத்தியில் இறுதி சடங்கு செய்யப்பட்டன. முன்னதாக வாணியம்பாடி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அரசு சார்பில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சி.ஆர்.பி.எப் துணை கமாண்டென்ட் விஜயலட்சுமி தலைமையிலான 15 வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்மீது போற்றபட்டிருந்த தேசிய கொடியை அவரது மகள் நாதன்யா விடம் அதிகாரிகள் வழங்கியபோது அவர் பெற்றுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்