Skip to main content

48 நாட்கள் யானைகள் நலவாழ்வு முகாம்... தமிழக அரசு அரசாணை!  

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

48 days Elephant Welfare Camp ... Government of Tamil Nadu!

 

பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற இடத்தில், 48 நாட்கள் யானைகள் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடக்கும் இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்கும் கோவில் யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். அப்படி கரோனா பரிசோதனை செய்யப்பட்டு யானைகளுக்கு கரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழைப் பெற்ற பிறகே யானைகள் முகாமிற்கு அனுப்பப்படும்.

 

யானைகளுடன் முகாமிற்கு அனுப்பப்படும் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். நலவாழ்வு முகாமில் பங்குபெறும் யானைகளுக்கு அருகே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. நோயுற்ற, தொற்று நோய் பாதித்த யானைகளை முகாமிற்கு கொண்டுவர தேவையில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்