அஞ்ச மாட்டோம், அஞ்ச மாட்டோம்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகம் முன்பு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ரத்துசெய், ரத்துசெய் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய், அமல்படுத்து, அமல்படுத்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து,5 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ,எம்.பி பதவிகளில் இருப்போர்களுக்கு பென்ஷன் வழங்கும் அரசே பலஆண்டுகாலம் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க மறுப்பது ஏன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்.
நாங்கள் யருக்கும் அஞ்சமாட்டோம்,அஞ்சமாட்டோம் என கோஷங்களை எழுப்பினர்.இதில் ஏராளமான ஆசிரியர்,அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பாலாஜி