Skip to main content

39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; அரசு அறிவிப்பு

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

39 IPS officers transferred; Government notification

 

ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண், திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய், கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக சசிமோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர வடக்கு பிரிவு துணை ஆணையராக பி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

மாநகர குற்ற ஆவணக் காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மதுவிலக்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளராக ஆர்.பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7வது பட்டாலியன் கமாண்ட்டராக ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு சரக ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக இ.சரவணகுமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் வினோத் சாந்தாராம் சென்னையில் சிபிசிஐடி-1 சிறப்புப் பிரிவுகள் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் விஜேய கார்த்திக் ராஜ், சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள வி.வி. கீதாஞ்சலி, சென்னையில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்