அண்மையில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் தமிழக மருத்துவ கல்லூரியில் தேர்வெழுதிய 4,250 மாணவர்களின் கைரேகையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தர பிறப்பித்துள்ள நீதிமன்றம் நீட் தேர்வானது பிற மாநிலங்களிலும் எழுதிக்கொள்ளலாம் என்ற காரணத்தினால் இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது ஒரு மாநில அளவிலான முறைகேடு கிடையாது தேசிய அளவிலான முறைகேடு என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிப்பதால்தான் இந்த பிரச்சனை எனவே மாணவர்களை கைது செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்காதீர்கள் என சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது.