அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை
செப்- 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
செப்- 1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டணை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என காவல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.