Skip to main content

உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2.98 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல்

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.

 

 2.98 lakh candidates filed for local bodies


கடந்த 9-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய (நேற்று) 16-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை (இன்று) 17-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 19-ந் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் மனுதாக்கல் செய்து முடித்துள்ளனர்.

இன்று வேட்புமனுக்களை மீது பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 2,98,335 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2.06 லட்சம் பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 54,747 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32,939 பேரும், மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,992 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணம் www.tnsec.tn.nic.in என்ற இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

 

 

 

சார்ந்த செய்திகள்