Skip to main content

அமைச்சர் சம்பந்தி வீட்டில் 24 மணி நேரம் நீடித்தது சோதனை..

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

 

raid

 

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சம்மந்தியான சேரன்குளம் அதிமுக ஊராட்சி செயலாளர் சேரன்குளம் மனோகரன் வீடு, பெட்ரோல் பங்க், அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய மத்திய வருமானவரித்துறை சோதனை லாட்ஜ், மற்றும் பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு சோதனைகள் முடிவடைந்த நிலையில் மற்ற இடங்களில் காலை 10 மணிக்கு சோதனைகள் முடிந்து அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு சரியான கணக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி எடுக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.

 

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சேரன்குளம் மனோகரனின் சொத்துகள் தானா அல்லது யாருடைய பினாமி சொத்துகளுக்காண ஆவணங்களும் உள்ளதா? என்றும் சோதனையில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னார்குடியில் சோதனை என்றாலே 24 மணி நேரம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“திருமாவளவனின் வெற்றியைத் தடுக்க தேர்தல் அலுவலகத்தில் சோதனை” - விசிக குற்றச்சாட்டு

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Vck allegations Raiding election office to prevent Thirumavalavan victory

சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பிரச்சாரம் முடிந்து இரவு நேரங்களில் தங்குகிறார். இந்த வீடு தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (9.10.2024) மாலை 7 மணியிலிருந்து எட்டு மணி வரை 7 பேர் கொண்ட குழுவினர் வருமான வரித்துறை என்றும் சரியான பதில் கூறாமல் தொல். திருமாவளவன் தங்கி இருக்கும் அறை மற்றும் அந்த வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லை.  இது குறித்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் சோதனை செய்தது குறித்தும் இங்கு எதுவும் இல்லை என கடிதமாக கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொடுக்கிறேன் என மழுப்பலாக சென்றுள்ளனர்.

vck

இதுகுறித்து சோதனையின் போது உடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திடீரென ஏழு பேர் கொண்ட குழுவினர் தலைவர் தங்கி இருந்த வீட்டிற்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது அறை உள்ளிட்ட வீட்டிலிருந்த அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். வழக்கமாக தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வருமானவரித்துறையினர் திருமாவளவனின் வெற்றியை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலகத்தில் சோதனை செய்தது தலைவரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது.  இதனால், அவரது வெற்றியைத் தடுக்க முடியாது” எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், விவசாய அணி மாநில நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்

Next Story

தொல். திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
it dept raided the house where Thirumavalavan was staying

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் விசிக வேட்பாளருமான தொல். திருமாவளவன் எம்.பி. தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இது குறித்து திருமாவளவன் கூறுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சிதம்பரத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவர் வீட்டில் திருமாவளவன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.