
விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு, மரக்காணம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிர்பலி அதிகரிக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.