மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு;
6 பேர் படுகாயத்துடன் மீட்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தனது குடும்பத்தினருடன், மதுரை விளாத்திக்குளத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, தனது ஆம்னி வேனில் திரும்பிக்கொண்டிருந்தார்.
மேலூர் புரண்டிப்பட்டி நான்குவழிச் சாலையில் வந்துக்கொண்டிருக்கையில், நிலைத்தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கருணாநிதியின் மனைவி சரோஜா மற்றும் மகள் அபிராமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கருணாநிதி, பாலசந்திரன், காஞ்சரா, தவமணி, அர்ச்சணா மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகியோர் மீட்கப்பட்டு மேலூர் அரசு பொது மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த விபத்துக்குறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முகில்