Published on 18/09/2023 | Edited on 18/09/2023

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் அருகே விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது நீரில் மூழ்கிய சந்தோஷ்(14), நந்தகுமார்(14) ஆகிய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உடல்களை மீட்ட அப்பகுதி மக்கள் கரையில் உடல்களை வைத்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.