Skip to main content

‘18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
18 IPS Officers transfer of work Tamil Nadu government action order

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை மாநகர வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமிக்கப்படுகிறார். சென்னை மாநகர தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு அப்பொறுப்புக்குக் கண்ணன் நியமிக்கப்படுகிறார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்படுகிறார். வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமிக்கப்படுகிறார். தெற்கு மண்டல ஐஜி கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்படுகிறார். ஜெயராம் ஐபிஎஸ் மாநில குற்ற ஆவண பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்படுகிறார். தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்படுகிறார். ஆயுதப்படை ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமிக்கப்படுகிறார். சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்படுகிறார். 

18 IPS Officers transfer of work Tamil Nadu government action order

சிபிசிஐடி ஏடிஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கடலோர காவல்துறை பாதுகாப்பு  ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களுக்கான இயக்குநராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப சேவைகள் ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவலர் காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமிக்கப்படுகிறார். ஆயுதப்படை ஐஜியாக விஜயகுமாரி நியமிக்கப்படுகிறார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Cauvery Management Commission meeting in Delhi

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Next Story

தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு

Published on 22/07/2024 | Edited on 23/07/2024
Transfer of continuing IAS officers; Tamil Nadu Government Notification

அண்மையாகவே தமிழகத்தில் பல்வேறு துறை ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்திய அறிவிப்பில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ், கடலூர் ஆணையாளராக அனு ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.