Skip to main content

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த பட்ஜெட்டில் ரூ.172 கோடி ஒதுக்கீடு!

Published on 15/03/2018 | Edited on 15/03/2018
ops


தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது,


உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.
சென்னை மாநில கல்லூரியின் விக்டோரியா விடுதியில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.
நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,986.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் நலனுக்காக ரூ.333.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அடர்ந்த வனத்தை உருவாக்க 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரங்கள் நடப்படும்.
பள்ளிக்கரணை சதுப்பு நில மீட்பு திட்டத்திற்காக ரூ.165.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
திருநெல்வேலி, கிருஷ்ணகிரியில் உணவு பதப்படுத்துதல் பூங்கா
குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகளாக ரூ.80 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.
2018-19-ம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்
அணைகள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.166.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி செய்யப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம்.
சர்க்கரை ஆலை லாபத்தில் விவசாயிக்கு பங்கு கிடைக்க திட்டம்.
ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 விவசாயிக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துவரை, உளுந்து, பச்சைப் பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.

சார்ந்த செய்திகள்