கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி மணிக்கு 14 கி.மீ என்ற வேகத்தில் மாண்டஸ் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலானது இன்று இரவு கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாளை அதிகாலை வேளையில் கரையைக் கடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகாபலிபுரத்திற்கு அருகே மாண்டஸ் கரையைக் கடக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மகாபலிபுரத்திலிருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.