Skip to main content

வெளியானது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

பல்வேறு எதிர்பார்ப்புகள், ஆலோசனைகளுக்கு மத்தியில் இன்று சுமார் 8 லட்சம் மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. 

 

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு  ரத்து செய்யப்பட்டதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது தொடர்பான அறிவிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

 

மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in,dge.tn.gov.in என்ற தளங்களில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in இந்த தளத்தில் ஜூலை 22 முதல் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் முதல்முறையாக தசம எண்களிலும் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 

சார்ந்த செய்திகள்