Skip to main content

தாலி கட்டிக்கொள்ளும் நேரத்தில் 12 பவுன் நகை, பணம் திருட்டு; கோவிலில் பரபரப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

12-pound jewel was stolen during a wedding held in the temple

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மகளுக்கும் மந்தார குப்பத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நெய்வேலியில் நேற்று வேலுடையான்பட்டு கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நெய்வேலி மந்தார குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

ஞாயிறு காலை கோவிலுக்கு மணமகள் தாலி கட்டிக்கொள்ளச் சென்றபோது மணமகள் அணிந்திருந்த 12 பவுன் நகை, ரூ. 12 ஆயிரத்தை அவரது அறையில் வைத்துப் பூட்டிவிட்டு கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்து வந்து பார்த்தபோது மணமகள் அறைக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அவர் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. இதனைப்   பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

தாலி கட்டிக்கொள்ளச் சென்ற நேரத்தில் மணமகளின் நகை மற்றும் பணம் திருடுபோன சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌. இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்