Skip to main content

மேலும் 106 பேருக்கு கரோனா... தமிழகத்தில் 1000 பேரை கடந்தது எண்ணிக்கை!!!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,


 

 106 people in Corona ...

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் 11 பேர் கரோனாவால்  உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 106  பேருக்கு கரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது மொத்தமாக 1,075 பேருக்கு தமிழகத்தில் பாதிப்பு உள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 969 ஆக இருந்த நிலையில் தற்போது 1,075 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று   50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொண்டால் அரசு கட்டணத்தை செலுத்தும் என்றும் தெரிவித்தார்.  
 

சென்னையில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 18 பேருக்கு ஒரு உறுதியானதன் மூலம் தற்போது எண்ணிக்கையானது 199 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் புதிதாக  நான்கு பேருக்கும், நாமக்கல்லில் நான்கு பேருக்கும், திருச்சியில் 4 பேருக்கும், ராணிப்பேட்டையில் இரண்டு பேருக்கும், கரூரில் மூன்று பேருக்கும் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்