புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள விளானூர் கிராமத்தைச் சேர்ந்த பால்வண்ணன் ஆவுடையார்கோயில் காவல் நிலையத்தில் கடந்த 6- ஆம் தேதி கொடுத்த புகாரில் எனது தாயார் பஞ்சவரணம் (47) 4- ஆம் தேதி ஆவுடையார் கோயில் சென்று தனியார் நிதிநிறுவனத்தில் ரூ 3 லட்சம் பணம் வாங்கியிருக்கிறார்.
அதன் பிறகு அவரது தோழியை சந்தித்தவர் வீடு திரும்பவில்லை என்று புகார் கொடுத்திருந்தார். ஆவுடையார்கோயில் போலீசார் பஞ்சவர்ணம் செல்போனை ஆய்வு செய்த போது கரூர் காவல் சரகம் குமுளூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் எண்ணில் அதிகமாக பேசியது தெரிய வந்தது. அதனால் காளிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது விளானூர் சிவக்குமார் அவன் கூட்டாளியுடன் சேர்ந்து கொன்று புதைத்துவிட்டோம் என்று உண்மையை சொன்னான்.
புதைத்த இடம் ஏம்பலில் இருந்து கண்ணன்குடி செல்லும் சாலையில் சிவகங்கை மாவட்டம் வடக்குகீழ்குடி பாலம் அருகே என்பதை அடையாளம் காட்ட, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் பஞ்சவர்ணம் மட்டுமில்லை. கடந்த 2018- ஆம் ஆண்டு ஜனவரியில குமுளூர் கனகாம்பாள் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தாங்களே. அதையும் நான் தான் செஞ்சேன் என்று சொல்ல போலீசாருக்கு அதிர்ச்சி. இதேபோல வேற பெண்களையும் கொலை செய்து புதைத்திருக்கிறானா காளிமுத்து என்பதை அறிய காவலில் எடுக்கவும் போலிசார் திட்டமிட்டுள்ளனர்.