Published on 12/12/2018 | Edited on 12/12/2018

கர்நாடகா மேகதாது அணைகட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அணை விவகாரம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தடைவிதிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு 4 வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்திருந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.