Skip to main content

10.5% வன்னியர் இடஒதுக்கீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

10.5% Vanniyar reservation - Chief Minister MK Stalin's advice!



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (14/04/2022) தலைமைச் செயலகத்தில், வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான மேல்நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 

இந்தக் கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், என்.ஆர். இளங்கோ, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் முனைவர் மா.மதிவாணன், இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர்கள் பி.கார்த்திகேயன், சி.கோபி ரவிக்குமார் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

10.5% வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்