
திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் திருச்சி மாநகரில் உள்ள 10 காவல்துறை ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருச்சி மாவட்டம், கோட்டை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். மாநகர நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் தயாளன், கோட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சைபர் க்ரைம் வேல்முருகன் தில்லைநகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். மாநகர நுண்ணறிவு பிரிவு நிக்ஷன் பாலக்கரை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். பி.டி.டி.எஸ் கே.என்.செல்வகுமார் கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். கண்டோன்மெண்ட் சேரன் செசன்ஸ் கோர்ட் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஸ்ரீரங்கம் அறிவழகன், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். கண்டோன்மெண்ட் ராஜேந்திரன், மாநகர நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். தில்லைநகர் சிந்துநதி, மாநகர சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். பாலக்கரை தங்கவேல், அரியமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உடனடியாக பணிமாற்றப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.