Skip to main content

அக்.14 முதல் +1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

+1 and +2 original mark sheet directorate of government examinations

 

 

+1, +2 தேர்வெழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "+1, +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம். தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும். தேர்ச்சியடையாதவர்களுக்கு +1, +2 மார்க்கை பதிவு செய்து ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்