Skip to main content

“நீங்கள் அதை என்னிடம் கேட்கக் கூடாது; அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செய்தியாளர் கேள்விக்கு தமிழிசை பதில்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

“You mustn't ask me that; I can't answer all that" was Tamilisai's answer to the reporter's question

 

திருச்சி விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்து பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் புதுச்சேரி முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். சிலிண்டருக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கான 1000 ரூபாய் திட்டம். தமிழகம் அறிவித்து கொடுக்க ஆரம்பிப்பதற்குள் புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறக்கும் பெண் குழந்தைகளுக்காக ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் சொன்னது போல் பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர், அதானி குறித்து பேசியதால் தான் மோடி பயந்துவிட்டார். அதனால் தான் ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சொல்கிறார்களே? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த தமிழிசை, “நீங்கள் அந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. அரசியல் ரீதியாக கருத்து சொல்ல முடியாது. புதுச்சேரி அரசாங்க ரீதியாக என்னால் கருத்து சொல்ல முடியும்” எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்