Published on 05/05/2018 | Edited on 05/05/2018
முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா பாஜகவுக்கு இருந்து விலகி, அக்கட்சிக்கு எதிரான விமர்சித்து வருகிறார். பாஜக எம்.பியாக இருந்துகொண்டே அக்கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் சத்ருகன் சின்ஹா. இவ்விருவரும் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கலைஞரை சந்தித்தனர்.
இச்சந்திப்பு குறித்து யஷ்வந்த் சின்ஹா, ‘’ஸ்டாலின் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவோம்’’ என்றார்.
சந்திப்பு குறித்து ஸ்டாலின், ‘’பாஜகவை அப்புறப்படுத்துவதான் எங்கள் நோக்கம். அதுகுறித்துதான் ஆலோசனை செய்தோம்’’ என்று கூறினார்.