Skip to main content

சாலை விபத்தில் 24 இடம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு -ராமதாஸ் இரங்கல்

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

rrr


ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊருக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களது வாகனம் உத்தர பிரதேசத்தின் ஆரையா என்ற பகுதியில் வந்தபொழுது, அதிகாலை 3.30 மணியளவில் மற்றொரு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
 

இந்த விபத்தில் 24 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 
 

உத்தரப்பிரதேச சாலை விபத்தில் 24 இடம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தனது ட்விட்டர் பக்கத்தில், ''உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று காலை இரு சரக்குந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 24 இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தொடரும் துயரங்கள் வேதனையளிக்கின்றன. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலும், அனுதாபங்களும்!'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்