Skip to main content

பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை! தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

mkstalin

                

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இதனை வரவேற்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தத் தீர்ப்பு தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
                   

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “திராவிட இயக்கம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன்!

 

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1989-ஆம் ஆண்டே கொண்டுவந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கலைஞர் உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை தி.மு.க.வின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.

 

சமூகம் - பொருளாதாரம் - குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலைநிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்’’ எனப் பதிவு செய்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்