Published on 04/04/2022 | Edited on 04/04/2022

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீசை தாக்கல் செய்துள்ளது.
மூன்று சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள டி.ஆர்.பாலு, இந்தக் கவன ஈர்ப்பு நோட்டீசை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.