நான் முதல்வராக பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவிற்கு மோடி மற்றும் அமித்ஷாவை அழைப்பதற்காக டெல்லி செல்வேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தன. கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவோ, 125 -130 தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெற்றிபெறும். எனக்கு தேர்தல் அரசியலில் இருக்கும் அனுபத்தை வைத்து சொல்கிறேன். காங்கிரஸ் வீட்டிற்கு செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை நான் எழுத்துப்பூர்வமாகக் கூட சொல்வேன் என தெரிவித்தார். மேலும், செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் டெல்லி சென்று, வரும் மே 17ஆம் தேதி நடக்கவுள்ள நான் முதல்வராகப் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுப்பேன் எனவும் அடித்துக் கூறியுள்ளார்.
அதேசமயம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்புவது முட்டாள்தனம். எடியூரப்பா மனநலம் பாதித்தவர் போல பேசிக்கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் நல்லவிதமாகவே வரும் என பேசியுள்ளார்.