தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அம்மாணவி இறுதியாக மாஜிஸ்திரேட் முன்பு கொடுத்த வாக்குமூலத்தில் மதம் மாற்றம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வு நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, “கடந்த ஆண்டு தைப்பூசத்திற்கு வேலை எடுத்துக்கொண்டு மாவட்ட மாவட்டமாகச் சுற்றியவர்கள்; இந்த ஆண்டு அந்த வேலைப் பற்றி ஏதாவது கவலைப்பட்டார்களா; வீரவேல் என்றார்கள், வெற்றிவேல் என்றார்கள். அந்த வேல்கள் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எங்காவது காட்சிக்கு வந்ததா? வேல் புகைப்படங்களை ட்விட்டரில் மட்டும் பதிவிட்டிருந்தனர். ஆனால், திமுகவின் நிலைப்பாடு அதுவல்ல. அனைத்து மதமும் சம்மதம். முதலமைச்சரின் நிலைப்பாடும் அதுதான். மதமாற்றம் என்பதற்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை.