Published on 28/04/2025 | Edited on 28/04/2025

தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கழக ஆக்கப் பணிகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 03-05-25 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.