ஊரடங்கு மற்றும் தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் அவரவர் வீட்டு வாசலில் கருப்பு துணியோடு உரிய இடைவெளியுடனும் பாதுகாப்புடனும் நிற்கும் படி கவன ஈர்ப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி இன்று மாலை, கரோனா நெருக்கடியை வெல்லவும் பசியிலிருந்து மக்களை காக்கவும் உடனே 5 இலட்சம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும். நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து உணவு தானியங்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும். மாநில அரசுக்குத் தேவையான நிதி வழங்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் கவன ஈர்ப்பு இயக்கத்தினரும், அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் கருப்பு துணியோடு அவரவர் வீட்டு வாசலில் நின்றனர்.
தியாகு (தழ்த் தேசிய விடுதலை இயக்கம்), வழக்கறிஞர் சி. ராஜு (மக்களதிகாரம்), கோவை கு. இராமகிருட்டிணன் (பெரியார் திராவிடர் கழகம்). திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), சிவ, செந்தமிழ்வாணன் (தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்), பாலன் (தமிழ்த் தேச மக்க்ள் முன்னணி), நாகை. திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி), கொளத்தூர் தா.செ. மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), சிதம்பரநாதன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மக்கள் விடுதலை), வாஞ்சிநாதன் (மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்), சௌ. சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்), கே.பி. மணிபாபா (தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி), அரங்க குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), பார்த்திபன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தெய்வமணி (அம்பேத்கர் சிறுத்தைகள்), கரு. தமிழரசன் (தமிழ் சிறுத்தைகள் கட்சி), அருள்மொழிவர்மன் (மக்களரசுக் கட்சி), ம. முகமது கவுஸ் (வெல்ஃபேர் கட்சி), காசு. நாகராசன் (தமிழ்நாடு திராவிடர் கழகம்) ஆகியோர் அவரவர் வீட்டு வாசலில் நின்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தினர்.