





திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் வந்த அங்கு தங்கினார்.
இன்று காலை நடைப்பயிற்சிக்காக விழுப்புரம் ஜென்ஷன் சாலை, பாண்டிச்சேரி சாலை, உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி ஆகியோர் சென்றனர்.
நடைபயிற்சி செல்லும்போது பொதுமக்களிடம் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டார் ஸ்டாலின். அப்போது பொதுமக்களும் அவரை ஆர்வமுடன் கைக்கூப்பி வரவேற்றனர். சிலர் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். ஜென்ஷன் சாலையில் உள்ள பிரகாஷ் என்வரின் டீ கடையில் டீ அருந்தினார். அப்போது மத்தியில் மோடி ஆட்சியை அகற்ற திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.