நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், முன்னிலை வகித்த மாணவ - மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மருத்துவ தரவரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் பலர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
நக்கீரன் : அண்மையில் நீட் தேர்வை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்...
மன்சூர் : அது எப்ப?
நக்கீரன் : 07.07.2019 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்...
மன்சூர் : நீட்டை ஆதரிச்சா?
நக்கீரன் : வரவேற்கிறார்...
மன்சூர் : யாரு? பிரேமலதா விஜயகாந்த்தா? அவரோட மச்சான் சுதீஷா?
நக்கீரன் : தேமுதிக தலைவர் பெயரில்தான் அறிக்கை வெளிவந்திருக்கிறது...
மன்சூர் : என்ன போட்ருக்கு... என்ன செய்தி சொன்னாங்க... சரியா சொல்லுங்க...
நக்கீரன் : இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்கின்ற முறையில், ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும்... (விஜயகாந்த் அறிக்கை)
மன்சூர் : எதுக்கு ஆதரிக்கிறார்... அவர் எத்தனை படம் எடுத்திருக்கிறார்... அவர் படமெல்லாம் பாத்தீங்கல்ல... அவர் இந்த மாதிரி திட்டத்தையெல்லாம் ஆதரிக்கிறவரா? விஜயகாந்த் பெயரை கெடுக்காதீங்க. அவரோட நல்ல பெயரை கெடுங்காதீங்க... ஆயிரக்கணக்கான சாதனைகளை அவர் பண்ணிருக்கிறார். என்னைப்போல நூற்றுக்கணக்கான கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஏழைகள் பக்கம் நின்ன மனுஷன். அப்படிப்பட்ட விஜயகாந்த் இப்படி பேசுவாரா? வெளியே வந்து அவரை நாலே நாலு வார்த்தை சொல்ல சொல்லுங்க.
நக்கீரன் : சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு என்கின்ற செய்தி வந்த அதே நாளில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள், எனவே இதை அரசியலாக்காமல்... (விஜயகாந்த் அறிக்கை)
மன்சூர் : என்ன அரசியலாக்க வேணாம். அரசியல் இல்லாம இது என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரட்டுவோம்.
நக்கீரன் : எல்லாவற்றையுமே அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டினுடைய வளர்ச்சி என்ற வகையில் சிந்திக்கவேண்டும்... (விஜயகாந்த் அறிக்கை)
மன்சூர் : மறுபடியும் மறுபடியும் இதென்ன வசனமா? என்ன அரசியல் படுத்தாத... அரசியலை மாத்தி தமிழ்நாட்டை நாசம்பண்ணி, யாருக்கு வேண்டும் நீட்... நாம் தமிழர் ஆட்சிக்கு வரும் நீட் தேர்வை ரத்து செய்யும். இவ்வாறு கூறினார்.