Skip to main content

அண்ணாமலை நடைப்பயணத்தில் விஜய் மக்கள் இயக்கம்; புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Vijay Peoples Movement on Annamalai Walk by Anand

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். 

 

அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. பாத யாத்திரையின் ஒரு பகுதியாக தற்போது மதுரையில் அண்ணாமலை தனது பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலையின் இந்த நடைப்பயணத்தின் போது விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

 

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது டிவிட்டரில், “விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகச் செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்