வேலூர், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட காவலூர் கிராமத்தில், சென்றாயசாமி கோயிலில், வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் சாமி தரிசனம் செய்து பின்னர் காவலூர், நரசிம்மபுரம், ஆலங்காயம், பெத்தூர், நிம்மியம்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் பேரணியாக சென்று வாக்கு கேட்டார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிச்சயமாக நடக்கும். வருமானவரித்துறை பணம் கைப்பற்ற இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் தவிர அதற்காக தேர்தலின் நிறுத்துகின்ற எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு வராது.
வேலூர் பாராளமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் இரண்டு சட்டமன்றத் இடைத்தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் கண்டிப்பாக நடைபெறும். அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெறும் என கூறினார்.
நான் வெற்றி பெற்றால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சட்டமன்றம் அலுவலகம் இருப்பது போல் 6 சட்டமன்ற தொகுதியில் 6 பாராளுமன்ற அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.