தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் துரைமுரகன் வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஒரு அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
அதில், வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வருமான வரித்துறையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கைகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்றடைந்துள்ளது.
இதனையொட்டி வரும் திங்கள்கிழமை காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில், வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளிவர உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு வெளிவந்தால் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் 38 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மட்டும் நடைபெறும்.