Published on 17/12/2018 | Edited on 17/12/2018

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து யாரும் போராடக்கூடாது என்று மிரட்டுவதற்காகத்தான் மே 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் உள்ளம் எரிமலையாக வெடிப்பதற்கு அஞ்சித்தான் ஆலையை மூடுவதாக அவர்கள் நாடகம் ஆடினார்கள்.
வேண்டுமென்றே அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆலையை திறப்பதற்கான வலிமைகளையெல்லாம் வைத்துவிட்டு வெளியுலகத்திற்கு நாங்கள் ஆலையை மூடிவிட்டோம் என்று பெரிய மோசடியான கபட நாடகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நடத்தியது. ஸ்டெர்லைட் நிர்வாகமும், அதிமுக அரசும் கூட்டு குற்றவாளிகள். இவ்வாறு கூறினார்.