
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று நள்ளிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அண்மையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக செங்கோட்டையன் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து இருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் ஒரு தரப்பினர் சந்திப்பு நடைபெறவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகம் வந்துள்ள நிர்மலா சீதாராமநாய் செங்கோட்டையன் சந்தித்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் காட்டங்குளத்தூரில் உள்ள அந்த தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பேச்சுப்போட்டி விழாவில் பங்கேற்க இருக்கும் நிலையில் அவரும் நிர்மலா சீதாராமனை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'நான் யாரை சந்திப்பதாக இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிட்டு சந்திப்பேன். இப்படி மறைமுகமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவித்துள்ளார்.